ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு (Mullaitivu) – வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான ஒரு புதிய பாதையை அமைக்கும் நோக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து தேர்தலில் களமிறக்கியுள்ளன.
இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, இடம்பெற்ற முதல் பிரசார நடவடிக்கையின் போதான கருத்துக்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி….