உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக சுயாதீனமான நீதித்துறை விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம்(Cardinal Malcolm Ranjith) உறுதியளித்துள்ளார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நேற்றையதினம் (19) சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்ட உறுதிமொழியை அளித்தார்.
பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பு
பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் அவசியத்தை பேராயர் வலியுறுத்தினார்.
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் சுமார் 270 பேர் உயிரிழந்ததுடன் 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.