சவால்களுக்கு தாம் பயப்படுவதில்லை என்றும் சவால்களை ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய கால பதவிகளுக்காக கட்சியையும் நாட்டையும் காட்டிக்கொடுக்க தயாராக இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரத்தில் (Anuradhapura) நேற்று (21) ஆரம்பமான கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து உரையாற்றும் போதே, நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
கட்சி உறுப்பினர்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “கடந்த சில வருடங்களாக உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் கட்சி உறுப்பினர்களும் கட்சியைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

எமது கட்சி அரசியல் சூழலை மாற்றியமைத்துள்ளது. நாம் ஏற்றுக்கொள்ளும் போது முழு நாடும் கொரோனா அச்சுறுத்தலில் மூழ்கியிருந்ததுடன், தொற்றுநோயிலிருந்து மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksa) முன்னுரிமை அளித்திருந்தார்.
நாட்டைப் பாதுகாப்பதற்காக நாட்டிற்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவு வழங்கியது.
சந்தர்ப்பவாத அரசியல்
எங்களுக்கு சந்தர்ப்பவாத அரசியலும் வேண்டாம் மற்றும் குறுகிய கால நோக்கங்களுக்காக நாங்கள் வேலை செய்யவில்லை. எனவே சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தது.

எமது வழியில் வரும் சவால்களை ஏற்றுக்கொள்ளும் கலையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து கற்றுக்கொண்டோம்.
தனது கட்சி ஒரு கொள்கையை சார்ந்துள்ளது, நல்ல பொருளாதாரம் கொண்ட நாட்டை கட்டியெழுப்ப கட்சி உறுதி பூண்டுள்ளது.” என்றார்

