முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை – இந்தியா இடையில் அமைக்கப்படவுள்ள பாலம்…! எழுந்துள்ள சிக்கல்

இலங்கைக்கும் (srilanka) இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் (Sri Siddhartha Sumangala Thero) தெரிவித்துள்ளார்.

குறித்த பாலம் அமைக்கப்படுமாயின் போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் (Indian High Commissioner) சந்தோஷ் ஜாவை சந்தித்த போது மல்வத்து பீடாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடத்தல்கள் அதிகரிக்கும்

தற்பொழுது இந்தியாவிலிருந்து கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வடக்கிற்கு கொண்டு வரப்படுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - இந்தியா இடையில் அமைக்கப்படவுள்ள பாலம்...! எழுந்துள்ள சிக்கல் | Ram Setu Land Bridge Between Sri Lanka And India

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைத்தால் இவ்வாறான கடத்தல்கள் அதிகரிக்கும் எனவும் மல்வத்து பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கையின் இரட்டை சகோதரன்

இதேவேளை, இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பாலத்தினால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாது என இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - இந்தியா இடையில் அமைக்கப்படவுள்ள பாலம்...! எழுந்துள்ள சிக்கல் | Ram Setu Land Bridge Between Sri Lanka And India

இந்த பாலத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்படும் எனவும் எனவும் வடக்கின் உட்கட்டுமான வசதிகள் மேம்படும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இந்த நாட்டு மக்களின் நலனுக்காக நாடு தழுவிய ரீதியில் எந்தவித பாகுபாடும் இன்றி திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இந்தியா இலங்கையின் மூத்த சகோதரன் அல்ல, அதன் இரட்டை சகோதரன் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்