எங்களுடைய ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், வறியவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகள் நிறுத்தப்படும்
கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் ஊழல் மோசடிகள், மக்களின் பணம் களவாடுதல் நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் திட்டம் எம்மிடம் உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.