முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும்
அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும்
தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (23.08.2024) காலை 9.00
மணிக்கு நடைபெற்றுள்ளது.

தேர்தல் கடமைகள் 

இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி பொலிஸ், மாவட்டச் செயலகம் மற்றும்
மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 5 மற்றும் 6 ஆம்
திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமை யாற்றுபவர்களுக்கும் மற்றும்
பாதுகாப்புப் படையினருக்கும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும்,

இவ்
தபால் மூல வாக்களிப்புக் கடமைக்காக நியமிக்கப்பட்ட அத்தாட்சிப்படுத்தும்
அலுவலர்கள் தபால் மூல வாக்களிப்பினை ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்கள் போலவே
செயற்பட்டு, இட ஒழுங்கமைப்பு, முகவர்களுக்குரிய ஏற்பாடுகள் போன்றவற்றை முறையாக
நடைமுறைப்படுத்தி தேர்தல் கடமைகளை ஒருங்கிணைத்து தேர்தல் சுமுகமாகவும்,
நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

யாழில் தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடல் | Discussion About Postal Voting In Jaffna

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களின்
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர்  இ.கி.அமல்ராஜால் விளக்கமளிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்களால் நியமிக்கப்பட்ட
அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.