முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரையும் ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரும் ஒன்றிணைந்து பொறாமை, வைராக்கியம்,
அதிகாரப் பேராவல் போன்றவற்றில் இருந்து விலகி நாட்டை கட்டி எழுப்ப
ஒற்றுமையோடு இணைந்து செயற்படுவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதினோறாவது மக்கள்
வெற்றிப் பேரணியில் நேற்றையதினம்(23) கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“எமது நாட்டில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி
இருக்கிறது.

இனவாதம்

கோபம், போட்டி, பகை, இனவாதம், மத வாதம் பழங்குடிவாதம், நிறவெறி
சாதிப் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

நாடு வங்கரோத்து அடைந்து 220
இலட்சம் மக்கள் தற்பொழுது கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரையும் ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு | Sajith Calls For Unity Against Ethnic Politics

தொடர்ந்தும்
இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரும் ஒன்றிணைந்து பொறாமை, வைராக்கியம்,
அதிகாரப் பேராவல் போன்றவற்றில் இருந்து விலகி நாட்டை கட்டி எழுப்ப
ஒற்றுமையோடு இணைந்து செயற்படுவோம்.

இவ்வாறான பிரிவினைகளோடு நாம்
முன்னோக்கிச் செல்ல முடியாது.

ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் இந்த நாட்டு மக்கள் குறித்து
சிந்திப்பதில்லை.

நாட்டு மக்களின் வாழ்க்கை

பொதுமக்களின் உயிர் நாடி தொடர்பில் புரிந்துணர்வின்றி
செயற்படுகின்றனர்.

நல்லிணக்கம் சகோதரத்துவம் நட்பு என்பவற்றின் ஊடாக நாட்டு
மக்கள் என்ற ரீதியில் ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டி எழுப்ப சக்தியை உருவாக்க
வேண்டும்.

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரையும் ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு | Sajith Calls For Unity Against Ethnic Politics

பிரிந்துள்ள நாடு பல்வேறு காரணங்களுக்காக அதல பாதாளத்தில்
வீழ்ந்துள்ள இந்த சமூகத்தை ஒற்றுமையின் ஊடாக கட்டியெடுப்புவதற்கு அனைவரும்
ஒன்றிணைமாறு அனைவரிடமும் நட்புக்கரம் நீட்டுகிறேன்.

இன மத மொழி குல ரீதியில் பிரித்து உருவான கடந்த அரசாங்கம் நாட்டு மக்களின்
வாழ்க்கையே சீரழித்து இருக்கிறது.

மதவாதம்

இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிர்ப்பு
தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி வீதிக்கிறங்கி போராடியுள்ளது.

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரையும் ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு | Sajith Calls For Unity Against Ethnic Politics

நல்லடக்கம்
செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது மக்களுக்காக ஐக்கிய மக்கள்
சக்தியே வீதிக்கிறங்கியது. மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காகவும்
ஐக்கிய மக்கள் சக்தி விதிக்கிறங்கியது.

சிலர் வரப்பிரசாதங்களுக்கு
அடிமைப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திலே அடிப்படைவாத
குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடந்து கொண்டனர்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்