எமது கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக
பட்ச ஆதரவு சஜித்துக்கே இருந்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாற்றுக் கருத்தும் இருந்தது. ஆனால் அதிக பட்ச
ஆதரவு சஜித்துக்கு (Sajith) இருப்பதனால் முடிவுகளை மேற்கொண்டோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கிண்ணியாவில் (Kinniya) இன்று (24) இடம்பெற்ற கட்சி பிரமுகர்களுடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்
ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இதேவேளை உயர்நீதிமன்றத்தின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தீர்ப்பு தொடர்பில் இங்கு கருத்து வெளியிட்ட அவர், “இது நியாயமான வேலை அல்ல ஜனநாயகத்தை மீறுகின்ற செயல்.
கடந்த அரசாங்கத்தால்
செய்யப்பட்டது தவறை திருத்துமாறும் கண்டித்து நீதிமன்றத்தினால் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது
ஆகவே ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
நடாத்துவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது“ என தெரிவித்தார்.