வாழை
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 23ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வாழை.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் மாரி செல்வராஜ் இதன்பின் கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றிக்கு பின் வாழை படத்தை இயக்கியுள்ளார்.
வாழை திரைப்படம் இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் சிறு வயதில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழின் சரிகமப பாடல் நிகழ்ச்சியில் இந்த வாரம் சூப்பர் ஸ்பெஷல்… யாருக்கான எபிசோட் பாருங்க
இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் போன்ற பிரபலமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் சிவணைந்தான் மற்றும் கிஷோர் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த சிறுவர்களின் நடிப்பு எதார்த்தமாக இருந்தது.
2 நாட்கள் வசூல்
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் வாழை திரைப்படம் உலகளவில் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், வாழை படத்தின் 2 நாட்களில் உங்களவில் ரூ. 4.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஒப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.