ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால், பங்களாதேஷ் (Bangladesh) போன்ற நிலைமை இலங்கையில் (Sri Lanka) ஏற்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் (Dambulla) நேற்று (24) இடம்பெற்ற “இயலும் சிறிலங்கா” பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “நாட்டின் அனைத்து இன மக்களும் ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். கடந்த இரு வருடங்களில் மின்சாரம், எரிவாயு, சம்பளம் இல்லாமல் தவித்த மக்களுக்கு ஜனாதிபதி எவ்வாறு தீர்வு வழங்கினார் என்பதை மக்கள் அறிவர்.
நடைமுறையில் தீர்வு
அன்று ஜே.வி.பி. நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க முட்பட்டது. 2 வருடங்களுக்கு முன்பே இலங்கையை பங்களாதேஷ் போன்று நெருக்கடிக்குள் தள்ளுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
மக்கள் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் தீர்வு வழங்கியுள்ளார். கடந்த இரு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்றார்.