முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்பகுதி வேட்பாளர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்போம் : சுரேஸ் பிரேமச்சந்திரன்

தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அது
தொடர்பில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம் என ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியா,
கோவில்புதுக்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று(25) இடம்டபெற்றது.

அதன்பின் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர்..

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்திய விடயங்கள்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தென்பகுதி வேட்பாளர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்போம் : சுரேஸ் பிரேமச்சந்திரன் | Sri Lanka Presidential Election 2024

தமிழ் பொது வேட்பாளரை வெல்ல வைப்பதற்கான
நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விடயங்களை
எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில்.

ஏற்கனவே வடக்கு – கிழக்கில் பிரசார வேலைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல ஜனநாயக தமிழ்
தேசியக் கூட்டணி தனது முழுமையான பங்களிப்பை வழங்கும். மாவட்ட ரீதியான முகவர்களை நியமிக்க வேண்டியுள்ளது. மாவட்ட ரீதியாக தேர்தல்
அலுவலகங்களை திறக்க  வேண்டியுள்ளது.

அதனை எவ்வாறு மேற்கொள்வது என பல
விடயங்களை பேசியுள்ளோம். இது தொடபில் யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களுடன்
கலந்துரையாடி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

தென்பகுதி வேட்பாளர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்போம் : சுரேஸ் பிரேமச்சந்திரன் | Sri Lanka Presidential Election 2024    

என்ன கொள்கைகளுக்காக பொதுவேட்பாளரை நிறுத்தினோமோ அந்த கொள்கைகளை வெற்றியடையச்
செய்யும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். ஆரோக்கியமான
கருத்து பகிர்வு இடம்பெற்றது.

எமது முடிவுகள் தொடர்பாக சிவில் அமைப்புகளுடன்
பேசி பொதுவான ஒரு முடிவை எடுத்து அதனை முன்னெடுத்துச் செல்வோம்.

இதில் அங்கத்துவம் வகிக்கும் சில கட்சிகள் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களை சந்தித்துள்ளார்கள்.

இதன்போது தேசிய
இனப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்பதையும், தென்பகுதி வேட்பாளரை நம்பி பல
தடவை வாக்களித்து இருக்கின்றோம் என்பதையும் ஆனாலும் எமது நம்பிக்கைகள்
நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.

தென்பகுதி வேட்பாளர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்போம் : சுரேஸ் பிரேமச்சந்திரன் | Sri Lanka Presidential Election 2024   

ஜனாதிபதியாக வந்தால் என்ன செய்வோம் என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 13 வது
திருத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்கள். எங்களது விடயங்களையும்
பேசியவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

நாம் ஒன்று சேர்ந்து பொதுவேட்பாளருக்கு தொடந்தும் வாக்கு சேகரிப்பு
நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம். எதிர்காலத்தில் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு
வேட்பாளர்கள் வருவார்களாக இருந்தால் அது தொடர்பில் நாம் கூடி ஆராய்ந்து
முடிவுகளை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார் 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.