லெபனானுக்கும் (Lebanon) இஸ்ரேலுக்கும் (Israel) இடையே அண்மைக்காலமாக விரிவடைந்து வரும் போரைத் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்துள்ளாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறிக்கப்பட்டதாக அந்நாட்ட பிரதமர் நெதன்யாகு (Netanyahu) தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், ஹிஸ்புல்லாவின் இராணுவத் திறனை பலவீனப்படுத்துவதற்கும் மோதலை மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இலக்குகளை முன்கூட்டியே தாக்கியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
சுகாதார அமைச்சகம்
இதன்போது மூவர் கொல்லப்பட்டதாகவும், இந்த உயிரிழப்புகள் பொதுமக்களா அல்லது போராளிகளா என்பதை லெபனான் சுகாதார அமைச்சகம் குறிப்பிடவில்லை என தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, “இஸ்ரேல் அதன் வடக்கு பிராந்தியங்களில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை நீக்கியயுள்ள நிலையில், ஹிஸ்புல்லா அன்றைய தினம் அதன் தாக்குதல்களை நிறுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளது.
இது ஒரு மிகப்பெரிய மோதலினால் எற்படவிருந்த ஆபத்தினை தற்காலிகமாக தடுத்திருந்தாலும், எதிர்காலத்திலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளது.
ஹமாஸ் தலைவர்
இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதாகவுள்ளதா ஈரான் கடந்த சில காலங்கலாக தெரிவித்து வருகின்றது.
அந்தவகையில், பதற்ற நிலை தீவிரமடைவதைத் தடுக்கவும், காஸாவில் நடந்து வரும் போர் உட்பட பரந்த மோதலைத் தீர்க்கவும் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போர் சூழல் தற்காளிகமாக தளர்த்ப்பட்ட போதிலும், மத்தியக்கிழக்கானது மிகவும் பதற்றம் நிறைந்ததாகவே காணப்படகின்றது.
மேலும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் எதிர்காலத்தில் விரிசல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென” குறித்த ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.