முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நேர்மை தியாக உணர்வு கொண்ட சஜித்: ரிசார்ட் பதியுதீன் புகழாரம்

சஜித்திடம் நேர்மை தியாக உணர்வுடன் வேகமாக பணி செய்யக்கூடிய ஆற்றல்
இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீண்ட கால பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை காணலாம் என தெரிவித்த ரிசார்ட், சஜித்
பிரேமதாசவை (Sajith Premadasa) வெற்றி கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (25) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தற்போது முன்னணியில் வெற்றி வேட்பாளராக
காணப்படுகின்றார் கட்சிகளில் இருந்து தனி நபர்கள் பிரிந்து செல்வதால் பெரும்
அளவிலான வாக்குகள் குறைவடைவதில்லை.

நேர்மை தியாக உணர்வு கொண்ட சஜித்: ரிசார்ட் பதியுதீன் புகழாரம் | Sajith Is A Honest Person Says Rishad Pathiudeen

கட்சியை நம்பித்தான் அதிகளவிலான
வாக்களிப்பார்கள். கணிசமான வாக்களிப்பு வீதமே பாதிக்கப்படும. தேர்தல் முடிவு
நன்மையானதாகவே இருக்கும். ஜனாதிபதியுடன் அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இருந்தாலும் தேர்தல் முடிவில் எத்தனை இலட்சம் வாக்குகளை பெற்றார் என்பது தெரியவரும்.

தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றாலும் சிறிதளவிலான வாக்குகளே
குறைவடையும். இவை ரணில் விக்ரமசிங்கவினுடைய (Ranil Wickremesinghe) வெற்றிக்கு காரணமாக அமையாது.

ராஜபக்ச அரசாங்கம்

ராஜபக்ச அரசாங்கம் இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியது. பொருளாதார
நெருக்கடியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இவ்வாறான நிலைக்கு
காரணமானவர்களே இன்று ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் உள்ளனர்.

நேர்மை தியாக உணர்வு கொண்ட சஜித்: ரிசார்ட் பதியுதீன் புகழாரம் | Sajith Is A Honest Person Says Rishad Pathiudeen

எனவே
வாக்காளர்கள் ஏமாந்து விடாமல்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திடம் நேர்மை இருக்கின்றது, தியாக உணர்வுடன் வேகமாக
பணி செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது, சிறந்த பொருளாதார அமைப்பை கட்டமைக்க
கூடிய ஒரு ஆளணி உள்ளது.

எனவே எல்லோரும் சேர்ந்து வேலை செய்கின்றபோது இந்த நாட்டை கட்டி எழுப்பலாம்.
வறுமையினைப் போக்கி எமது நீண்ட கால பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை காணலாம்.
சஜித் பிரேமதாசவை வெற்றி கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.