பாகிஸ்தானின் (Pakistan) – பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அனர்த்தம் காரணமாக மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளம்
இதேவேளை, மழையினால் 5,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 158 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 102 ஏக்கர் விவசாய நிலங்களும், 35 கிலோமீற்றர் வீதிகளும் திடீர் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாகவும், கடும் மழை காரணமாக 7 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 131 விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தோனேசியாவின் (Indonesia) – ருவா கிராமத்தில் நேற்று முன்தினம் (25) பெய்த கனமழையில் சிக்கி 13 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது
.