அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, தேயிலை செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 200, T 750, U 709, U 834, T 65 ஆகிய 5 வகையான உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நிவாரணம்
தேயிலைக்கு பயன்படுத்தப்படும் 50 கிலோ கிராம் உர மூட்டையின் விலை 4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த உர மானியத்தை வழங்குவதற்கான மொத்த செலவு 2,400 மில்லியன் ரூபாவாகும்.
குறித்த பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறாமல் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை தேயிலை சபையின் நிதியை பயன்படுத்தி முழு தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.