ஜனநாயகன்
தளபதி விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தால் சினிமாவிலிருந்து விழா முடிவு செய்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டாவது பாடல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள ‘சிறை’ திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?
முன்பதிவு
வருகிற ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் வெளிவரவிருக்கும் நிலையில், வெளிநாட்டில் முன்பதிவு தொடங்கிவிட்டது. இதுவரை நடந்த முன்பதிவில் UK-வில் மட்டுமே ரூ. 1.3 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் லியோ படத்தின் சாதனையையும் முறியடித்துள்ளது. அது எப்படி என்றால், லியோ படம் முதல் நாள் முன்பதிவில் UK-வில் 10000 டிக்கெட்ஸ் விற்பனை ஆனது. ஆனால், தற்போது ஜனநாயகன் படத்திற்கு 12,700 டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் லியோ சாதனையை ஜனநாயகன் முறியடித்துள்ளது.

மேலும் ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளை எல்லாம் சேர்த்தால், இதுவரை ரூ. 1.5 கோடி முன்பதிவில் மட்டுமே வசூல் வந்துள்ளது என்கின்றனர். இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் முன்பதிவாக பார்க்கப்படுகிறது.

