நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் தனியார் நிறுவனமொன்று தேர்தல் தொடர்பான கருத்துகணிப்பொன்றை நடத்தியுள்ளது.
அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஆகியோரிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக இதன்மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான சாதகமான நிலைமை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கான சாதக நிலை ஜூன் மாதத்தில் காணப்பட்டதை விட 29 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சஜித் பிரேமதாசவிற்கான (Sajith Premadasa) சாதக நிலையில் சிறிய மாற்றமே ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.