முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறீதரனிடத்தில் மன்னிப்பு கோரிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க

நடந்து முடிந்த பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது வாழ்த்து கூற முற்பட்ட சிவஞானம் சிறீதரனை நேரமின்மையால் தடுத்தமைக்கு சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரியுள்ளார். 

நேற்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில், முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அஷோக்க ரன்வெலவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

நேரமின்மை 

அவரைத்தொடர்ந்து மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துக்களைத் தெரிவு செய்திருந்தார். அவர்களைத்தொடர்ந்து சிவஞானம் சிறீதரன், நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக தமது ஆசனங்களில் இருந்து எழுந்தபோதும், நேரமின்மை காரணமாக வாழ்த்துரைகள் மட்டப்படுத்தப்பட்டன.

சிறீதரனிடத்தில் மன்னிப்பு கோரிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க | 10Th Parliament Session Mps Tried To Wish Speaker

இதனை அவதானித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்காக பிரதிநிதிகள் ஒன்று கூடிய வேளையில் சிறீதரனிடத்தில் மன்னிப்பு கோரியதோடு எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, நடைபெற்ற முதலாவது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள முதலாவது நாடாளுமன்ற அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தினை நடத்துவதற்கான திகதி தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

சிறீதரனிடத்தில் மன்னிப்பு கோரிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க | 10Th Parliament Session Mps Tried To Wish Speaker

இதன்போது, ஆளும் தரப்பினால் 26ஆம், 27ஆம் திகதிகள் முன்மொழியப்பட்டபோது சிறீதரன் குறித்த இரண்டு திகதிகளில் மாவீரர்கள் வாரத்தின் இறுதிநாளாக இருப்பதால் பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து 28ஆம் திகதி மாலை நாடாளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறீதரன் கூறியபோதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித்தலைவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.