Courtesy: Sivaa Mayuri
சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தேர்தல் விஞ்ஞாபனம் ஓகஸ்ட் 29 ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க இதனை இன்று (27) குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
இதற்கமைய, புலவன் ஸ்ரீலங்கா (இலங்கையால் முடியும்) என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனமே வெளியிடப்படவுள்ளது.
மேலும், இந்த விஞ்ஞாபனம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்று கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.