சட்டவிரோத பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த 05 பயணிகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று (28) கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட், விஸ்கி மற்றும் செய்மதி தொலைக்காட்சி ஒலிபரப்பு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சீன பிரஜைகள், இரண்டு இலங்கையர்கள் மற்றும் ஒரு இந்தியரும் உள்ளடங்கியுள்ளனர்.
தண்டப்பணம் அறவீடு
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் பத்மினி குமாரிஹாமி தலைமையிலான குழுவினர் இந்த சுற்றுவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு 03 இலட்சம் ரூபா தண்டப்பணத்தை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.