முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாணக்கியனும் சுமந்திரனும் இந்தியாவின் முகவர்கள்: செல்வராஜா கஜேந்திரன் எம்.பி

சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை எனவும் அவர்கள் இருவரும் இந்தியாவின் முகவர்கள் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில்
ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை
சாணக்கியன் எம்.பி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தீர்மானிக்கும்
என்பதை அடிக்கடி கூறி வருகின்றார்.

இவர்கள் இந்தியாவின் முகவர்கள் என்பது
உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

இந்திய மேற்கு தரப்பு எந்த முகவருக்கு
வாக்களிக்க வேண்டும் என்று சொல்கின்றதோ அந்த முகவருக்கு வெளிப்படையான
அறிவித்தலை செய்வார்கள்.

தமிழ் மக்கள் அந்த மனநிலையில் இல்லை என்று சொன்னால்
ஏதோ ஒரு வகையில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் இறுதி நேரத்தில் எடுத்து
முடிவுகளை மாற்றக்கூடியவர்கள்.

சாணக்கியனும் சுமந்திரனும் இந்தியாவின் முகவர்கள்: செல்வராஜா கஜேந்திரன் எம்.பி | Chanakyan Sumandran Were Agents Of India Kajendren

தங்களுக்கென்று ஒரு நிலைப்பாடு கிடையாது. சாணக்கியன் மும்மொழிகளிலும்
சரளமாக பேசக்கூடியவர். 

இவ்வாறு பேசுகின்ற அவர் நாடாளுமன்றத்தில்
அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகின்றாரா அல்லது எதிராக பேசுகின்றாரா என்பது
குறித்து மக்களால் பிரித்துணர முடியாதுள்ளது.

எப்பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவாரே தவிர ஒரு போதும் அரசுக்கெதிராக அவர் பேசுவது
கிடையாது.

சாணக்கியனும் சுமந்திரனும் இந்தியாவின் முகவர்கள்: செல்வராஜா கஜேந்திரன் எம்.பி | Chanakyan Sumandran Were Agents Of India Kajendren

அரசாங்கத்தை விமர்சிப்பதன் ஊடாக அவர் மக்களுக்கு தன்னை தமிழ் தேசிய
வாதியாக காட்ட முற்படுகின்றார்.

மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை
விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் இவ்வாறானவர்களது பசப்பு
வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது.

தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.