முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெறும் வாய்ச்சொல் வீரனல்ல ரணில் : பிரசன்ன ரணதுங்க புகழாரம்!

வாய்ச்சொல்லில் வெட்டி வீழ்த்தும் தலைவர்கள் பலர் இருக்கின்ற போது செயல் வீரராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மட்டுமே உள்ளார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் (Monaragala) இடம்பெற்ற இயலும் சிறிலங்கா பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இலங்கையில் பொருளாதார நெருக்கடி எற்பட்ட போது நிபந்தனையின்றி நாட்டை ஏற்பவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த போதும் எதிர்கட்சித் தலைவர் சஜித் அதற்காக முன்வரவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி

அப்போது தான் ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம். தனது திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதாக கூறினார். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை சரியாக செய்து முடித்தார்.

வெறும் வாய்ச்சொல் வீரனல்ல ரணில் : பிரசன்ன ரணதுங்க புகழாரம்! | Prasanna Ranatunga On Choosing Ranil Over Sajith

கடந்த இரு வருடங்களில் மக்கள் கஷ்டங்களைப் போக்க அவர் செய்த அர்பணிப்புக்களை கண்டதாலேயே மீண்டும் ஒரு முறை  ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வந்தோம். அதனால் சிலர் ஐக்கிய தேசிய கட்சியில் நாம் இணைந்து கொண்டதாக போலி பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதாலேயே ஜனாதிபதியுடன் இருக்கிறோம்.

ஜே.வி.பியின் வன்முறை

ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை. 2022 இலும் அனுர குமாரவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் அதை செய்ய முற்பட்டனர். அது நடக்கவில்லை.

வெறும் வாய்ச்சொல் வீரனல்ல ரணில் : பிரசன்ன ரணதுங்க புகழாரம்! | Prasanna Ranatunga On Choosing Ranil Over Sajith

சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று சொன்னதை நாளை மறந்துவிடுவார். அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டுக்கு தேவையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.” என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளைமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்