ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய
தேவை என இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
மருதபாண்டி ராமேஷ்வரன் (M. Rameshwaran) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து (31.08.2024) அன்று கொட்டகலை
பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே
அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிலவேளை ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும்
தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ரணிலின் வெற்றி
எனவே, மலையக மக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும், நாட்டின் நலன்கருதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் ராமேஷ்வரன் அழைப்பு
விடுத்துள்ளார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின்
முன்னளா் தவிசாளர் ராஜமணி பிரசாத், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர்
அனுஷா சிவராஜா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.