அரகலிய போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தன்னை காப்பாற்றுமாறு அழுது கொண்டே தொலைபேசியில் அழைத்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(nimal sripala de silva) தெரிவித்தார்.
அரகலிய போராளிகளால் அவர்களது வீடு முற்றுகையிடப்பட்ட போது தம்மைக் காப்பாற்றுமாறு நாமல் ராஜபக்ச இவ்வாறு தமக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதேவேளை இராணுவத் தளபதியையும் அழைத்ததாகவும் அமைச்சர் கூறினார்.
இருந்த நிலையை மறந்த நாமல்
நாமல் ராஜபக்ச அன்று இருந்த நிலைமையை மறந்து இன்று தம்பட்டம் அடித்துக்கொண்டு ஜனாதிபதி பதவியை கோருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச்(ranil wickremesinghe) சுற்றி மக்கள் திரண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.