ஏ.ஆர் .ரஹ்மான்
உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார் ஏ.ஆர் .ரஹ்மான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை வியக்கவைத்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த ராயன் படம் வரை இவர் இசையில் உருவான பல படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. அடுத்ததாக ரஹ்மான் இசையில் தக் லைஃப், ஜீனி, ராமாயனா, ராம் சரண் 16 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் அது இல்லையா.. ஜீவா பேச்சுக்கு கொந்தளித்த சின்மயி
வைரல் புகைப்படம்
இணையத்தில் அவ்வப்போது திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் உடன் சிறுவன் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷ்
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், இவர் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தான். ஆம், ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகனான ஜி.வி. பிரகாஷ் தனது சிறு வயதில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
மேலும் தனது ஜென்டில் மேன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலில் வரும் குழந்தை குரலுக்கு சொந்தக்காரரும் ஜி.வி. பிரகாஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.