விடாமுயற்சி
நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு.
இப்படத்திற்கு பிறகு அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் அஜித் அடுத்து நடிப்பார் என்று பார்த்தால் அவர்களது கூட்டணி அமையவில்லை.
அதன்பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் கமிட்டான அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்தார்.
படத்திற்கான முழு படப்பிடிப்பும் அஜர்பைஜானில் செம மாஸாக நடந்துள்ளது.
அங்கு படப்பிடிப்பில் நிறைய ஆக்ஷன் காட்சிகளின் போது அஜித்திற்கு விபத்து ஏற்பட்ட வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
அர்ஜுன் பேட்டி
படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுனிடம் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதில் அவர், படம் பார்த்தால் என்னுடைய கேரக்டர் குறித்து அனைவருக்கும் தெரியவரும். அஜித் எப்பவுமே கிங் தான் என தன்னுடைய பாராட்டை கூறியுள்ளார்.