சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (02) முற்பகல் 10 மணியளவில் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வு ஆரம்பமானது.
சர்வமத வழிபாடுகளுடன் ” நாமல் இலக்கு – உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு ” என்ற தொனிப்பொருளின் கீழ் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி
இங்கு உரையாற்றிய நாமல் ராஜபக்ச,
அடுத்த 10 வருடங்களுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நாட்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வரி வருவாயையும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் வெயியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.