வட மாகாண கடற்றொழில் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் அ.அன்னராசா, மற்றும்
நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் தலைமையில் கோப்பாய் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர்
பா.அரியநேந்திரனுக்கு சார்பாக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரசார நடவடிக்கையானது நேற்று(02.09.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரசார நடவடிக்கைகள்
இதன்போது அவர்கள் வீடு வீடாகவும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று தமிழ் பொது வேட்பாளர் என்பவர்
காலத்தின் சரியான தெரிவு என்றும், சிதறிக்கிடக்கின்ற தமிழ் மக்களை
ஒன்றிணைப்பதற்க்கான ஒரு செயற்பாடு என்றும் தெரிவித்து தமது பிரசார
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.