ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்துள்ளோம் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்த கருத்தானது ஒப்பந்த அரசியலை மையப்படுத்தியது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணய உரிமை பற்றியோ, 13பிளஸ் தொடர்பிலோ குறிப்பிடாத சஜித் பிரேமதாசவை ஆதரித்தமைக்கான காரணத்தை சுமந்திரன் விளக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
மேலும், தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும் முன்னரே இவர்களை அவரை வெளியேற வலியுறுத்தியமையும், சந்தேகத்தை எழுப்புவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,