முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்வி மூலமே மலையகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் : ராமேஷ்வரன் எம்.பி நம்பிக்கை

கல்விப் புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென இ.தொ.காவின் (Ceylon Workers Congress) தவிசாளரும், நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் (M. Rameshwaran) தெரிவித்துள்ளார்.

அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவமும்,
முன்னுரிமையும் வழங்கி வருகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரித்து நேற்று (04.09.2024) பொகவந்தலாவ (Bogawantalawa) பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நிதி ஒதுக்கீடு

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ராமேஷ்வரன், “அமைச்சர் ஜீவன் தொண்டமானும் (Jeevan Thondaman) அதிகளவான
நிதி ஒதுக்கீடுகளை கல்விக்காக செய்துவருகின்றார். அதனால்தான் இன்று எல்லா
துறைகளிலும் எமது சமூகத்தினர் பிரகாசித்து வருகின்றனர்.

கல்வி மூலமே மலையகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் : ராமேஷ்வரன் எம்.பி நம்பிக்கை | Mp Rameshwaran On Education In Upcountry

பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சமுர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் அஸ்வெசும
வந்தபோது எமது மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என எமது அமைச்சர் திட்டவட்டமாக
எடுத்துரைத்தார். இதனையடுத்து எமது மக்களும் உள்வாங்கப்பட்டனர்.

அதுமட்டுமல்ல
காணி உரிமை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன. தோட்டங்களை
கிராமங்களாக்குவதற்குரிய அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தொழிலாளர்களின் நலன்

எமது மலையகத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல அபிவிருத்தி திட்டங்களை
முன்னெடுத்துள்ளார். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றார். எனவேதான்
மக்கள் பக்கம் நின்று நாம் அவரை ஆதரிக்கின்றோம்.

கல்வி மூலமே மலையகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் : ராமேஷ்வரன் எம்.பி நம்பிக்கை | Mp Rameshwaran On Education In Upcountry

அதுமட்டுமல்ல நடைமுறைக்கு
சாத்தியமான விடயங்களையே அவர் உறுதிமொழியாக வழங்கிவருகின்றார். ஆனால் சில
வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக முடியாத விடயங்களையெல்லாம் கூறுகின்றனர்.
ஏனெனில் தேர்தலின் பின்னர் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை
ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நாம் தயாரில்லை. தொழிலாளர்களின் நலனே
எமக்கு முக்கியம். எனவே, ஆயிரத்து 700 ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்.

ஆயிரத்து 700 ரூபாவுக்கு என்ன ஆனது என சிலர் கேட்கின்றனர். ஆனால்
நல்லாட்சியின்போது அத்தரப்பினரால் 50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முடிந்ததா?
இல்லை. நாம் வந்த பிறகுதான் ஆயிரம் ரூபா கிடைக்கப்பெற்றது.

தற்போது அடிப்படை
நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது. மேலதிக கொடுப்பனவாக
350 ரூபாவை பெறுவதற்குரிய பேச்சுவார்த்தையும் இடம்பெறுகின்றது.“ என தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.