முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலிமுகத்திடல் போராட்ட விவகாரம் : உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கலிமுகத்திடலில் (Galle Face) முன்னெடுக்கப்பட்ட “கோட்டா கோ கம” போராட்டத்தின் போது, ​​மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயர் நீதிமன்றம் நேற்று (04) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகளில் அபாயகரமான வீதித் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. 

உயர் நீதிமன்றம் உத்தரவு

இதன்படி, இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி விளக்கமளிக்குமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்ட விவகாரம் : உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Gota Go Home Protest Issue High Court Order

சட்டத்தரணி சேனக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அடிப்படை மனித உரிமைகள் மீறல்

காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் போது, ​​ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகளில், பொதுமக்களுக்கு ஆபத்தான கூர்முனையுடன் கூடிய தடுப்புகளை காவல்துறையினர் அமைத்ததாக மனுதாரரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

காலிமுகத்திடல் போராட்ட விவகாரம் : உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Gota Go Home Protest Issue High Court Order

இதுபோன்ற ஆபத்தான வீதித் தடுப்புகளை வைத்ததன் ஊடாக பொது மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்து, பிரதிவாதிகளிடம் இருந்து 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை பெற்றுத்தருமாறு மனுதாரர், உயர் நீதிமன்றில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்