மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான
தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஏனைய கிராம
மக்கள் எவ்வாறு உரிமைகளை அனுபவிக்கின்றனரோ அதேபோல பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கும் உரிமைகள் நிச்சயம்
கிடைக்கப்பெறும்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார்
எனவும், எல்லோருக்கும் வாக்களித்துவிட்டோம், இம்முறை அவர்களுக்கும்
வழங்கிபார்ப்போமே என்ற கருத்தாடல்தான் கிராம மட்டங்களில் இன்று நிலவுகின்றது.
ஜனாதிபதி எவரையும் பாதுகாக்கவில்லை. நாட்டையும், நாட்டு
மக்களையும்தான் அவர் பாதுகாத்துள்ளார். குறுகிய காலப்பதிக்குள் அவர்
தலைமையில் தான் ஊழல்களுக்கு எதிராக பல சட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உரிய
சட்ட ஏற்பாடுகள் இருந்தால் எவரும் தப்ப முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,