ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayaka) ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாபெரும் பிரசார கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இந்த கூட்டமானது, இன்றைய தினம் (05.09.2024) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.