இலங்கைக்கான (Sri lanka) அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழுவினர், தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை (K. S. Kugathasan) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது தமிழரசுக்கட்சியின் (ITAK) திருகோணமலை (Trincomalee) மாவட்டப் பணிமனையில் நேற்று (06.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது, திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் எதிர்கொள்ளும் நிலச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதேவேளை, சண்முகம் குகதாசனை (Shanmugam Gugadasan) ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகளும் சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்றுமுன்தினம் (05) தமிழரசுக் கட்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.