முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புத்திசாதூரியமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

Courtesy: uky(ஊகி)

தேசிய மக்கள் சக்தியின் கோட்பாடுகள், ஒரு போதும் மக்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத அம்சங்களையே அதில் அடங்கியுள்ளன. மனித சமூக பண்பாட்டு அம்சங்களுக்கு முரணான, அங்கீகரிக்க முடியாத பல விடயங்கள் இருக்கின்றன என்று கண்டி (Kandy) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார். 

ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் அக்குறணை கசாவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

“இந்த ஜனாதிபதித் தேர்தலை அறிமுகப்படுத்திய ஜே. ஆர் ஜயவர்தன முதல் கடைசியாக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச வரையில் பல ஜனாதிபதிகளை நாங்கள் இந்த நாட்டில் தெரிவு செய்துள்ளோம். இருந்த போதிலும் இந்த ஜனாதிபதியை தெரிவு செய்வதிலேயே பல சிக்கல்களை நாங்கள் காணுகின்றோம்.

பிரச்சினைக்கான தீர்வுகள்

இன்று எமது நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய தருணத்தில் இந்த நாட்டின் தேவையான பொருளாதாரத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்புகின்ற தலைவரைத் தெரிவு செய்யும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இத்தேர்தலை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

அப்படிப் பார்க்கின்ற போது இந்த தேர்தலில் 39 பேர் போட்டியிடக் களமிறங்கியுள்ளார்கள். இதில் ஒருவர் மரணம் எய்து விட்டார். அதில் சுமார் 15 பேர் அளவில் இந்த தேர்தல் தொடர்பில் எந்தவிதமான நடடிவக்கைகளையும் முன்னெடுக்க வில்லை என்பதை ஊடகம் மூலம் அறிகின்றோம்.

புத்திசாதூரியமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு | 2024 Election In Sri Lanka Advice For People

அதிலும் நான்கு பேர்களுக்கிடையே தான் போட்டி நிலவுகின்றது. எமது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் வங்குரோத்து நிலைமையை நீக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற ஒரு சக்தி வாய்ந்த தலைவர் என்று முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளதைக் நாம் காணுகின்றோம்.

கடந்த காலங்களில் சஜித்துக்கு எதிராக செயற்பட்ட பலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருடன் பெரும் கூட்டமாக கைகோர்த்துக் கொண்டு இணைந்துள்ளனர்.

எமது அக்குறணை ஊரைப் பொறுத்த வரையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது ஆகும். இந்த தேர்தல் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்யும் தேர்தல் அல்ல.

அக்குறணை மண்ணும் மக்களும் வெற்றியடைச் செய்யும் தேர்தலாகவும் இதனைப் பார்க்க வேண்டும். இன்று நாங்கள் எல்லோரும் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

புத்திசாதூரியமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு | 2024 Election In Sri Lanka Advice For People

இந்த நிலைமை கட்டாயமாக மாற்றம் பெற வேண்டும். இந்த மாற்றத்தை உண்டு பண்ணக் கூடிய கட்சிதான் ஐக்கிய மக்கள் சக்தி. ஆகவே உங்களுடைய வாக்குகளை தவறாமல் எமது கட்சிக்கு வழங்கி சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்யுமாறு உங்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த காலத்தில் எனது மாமா முன்னாள் அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீட் முதல் எனது காலம் வரையிலும் உங்களுடைய பெறுமதிமிக்க வாக்குகளை வழங்கி எங்களை வெற்றி பெறச் செய்தீர்கள். உண்மையிலேயே இந்த ஊரில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நான் நன்கு அறிவேன்.

கடந்த காலங்களில் எமது பிரதேசத்தின் தேவைகளை ஓரளவு தீர்வைப் பெற்றுத் தரக் கூடியதாக இருந்த போதிலும் கூட இத்தேர்தலுக்குப் பிறகு அவற்றை நிறைவேற்றி வைப்பதில் மிகுந்த முனைப்புடன் செயற்படுவேன்.

அக்குறணை மக்களின் பல்வேறுப்பட்ட பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக நாம் கருத வேண்டும்.

அங்கீகாரம் வழங்குதல் 

தேசிய மக்கள் சக்தியின் கோட்பாடுகள் ஒரு போதும் மக்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத அம்சங்களையே அடக்கியுள்ளன.

மனித சமூக பண்பாட்டு அம்சங்களுக்கு முரணான அங்கீகரிக்க முடியாத பல விடயங்கள் இருக்கின்றன.

தன்னினச் சேர்க்கை மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு சட்டரீதியிலான அங்கீகாரம் வழங்குதல் போன்ற பல விடயங்கள் தற்போது தேர்தல் மேடைகளில் மிகவும் காட்டமாகப் பேசப்பட்டு வருகின்றன.

புத்திசாதூரியமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு | 2024 Election In Sri Lanka Advice For People

பெரும் பெரும் வர்த்தக நிலையங்களை அரச உடமையாக்கி அவர்களுக்கு ஓர் இலாபத்தைக் கொடுக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த நாட்டு மக்களைப் பாதிக்கக் கூடிய பல விடயங்கள் உள்ளன. அவர்கள் அவற்றைச் செய்யப் போவதாகக் கூறி வருகின்றார்கள்.

இது ஒரு பயங்கரமான சூழ்நிலை. எமது சில இளைஞர் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் ஆதரிப்பதை நாங்கள் காணுகின்றோம். அவர்கள் பிழையான வழிகளில் இருக்கின்றார்கள்.

ஒரு போதும் இப்படியான கட்சி ஒன்றுக்கு நாங்கள் எப்போதும் ஆதரிக்கவுமில்லை. இனிமேல் ஆதரிக்கவும் கூடாது.

எனவே இப்படியான கட்சிக்கு வாக்களித்தால் அது மிகவும் பாரதூரமான விடயமாக அமையும். ஆகவே எமது வாக்குகளை புத்திசாதூரியமாக சரியான முறையில் பாவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.