எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தோல்வியடைந்தால் இரண்டு வருடங்களில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கு இலங்கை செல்ல வேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 78வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) அல்லது அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake )வெற்றி பெற்றால் இலங்கை மீண்டும் ஜனாதிபதி தேர்தலைச் சந்திக்க நேரிடும்.
சரியான புரிதல் இல்லை
பொருளாதாரத்தை நடத்துவது குறித்து அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாததே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.