தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள
கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர்
பா.அரியநேந்திரனுக்கு சார்பான பரப்புரையானது பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் நேற்று(07.09.2024) கோப்பாய் தொகுதியில் நீர்வேலி, பால் பண்ணை, கோப்பாய், சிறுப்பிட்டி, உட்பட்ட பல்வேறு
பகுதிகளில் அதி தீவிரமாக இடம் பெற்றுள்ளது.
பரப்புரை
சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம்
தலைமையில் இடம்பெற்றுவரும் பரப்புரையில் வட மாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளும்
இணைந்துள்ளனர்.