ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரணில்
விக்ரமசிங்கவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார
திஸாநாயக்கவுக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றது என்றும், அவர்களுக்கு
வாக்களிப்பது வீணான செயல் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித்
பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாறும்போதே அவர் இதனைக்
கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஐக்கிய தேசியக்
கட்சியினர் தமது வாக்குகளை வீணாக்குவதை விடுத்து எமக்கு வாக்களிக்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பது என்பது அநுரகுமார திசாநாயக்கவுக்கு
வாக்களிப்பதாகும்.

அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களிப்பது, பொது நிதியைத்
துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு ஆதரவான வாக்களிப்பாகும்.
ரணில் விக்ரமசிங்கவின் சமீபத்திய அறிக்கைகள், அவர் தனது வெற்றியில் உறுதியாக
இல்லை என்பதையும், அவருக்கும் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஒருவித புரிதல்
உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசு தேசத்தை அபிவிருத்தி செய்யும் என்று ரணில் மற்றும்
அநுரகுமார இருவரும் பயப்படுகின்றார்கள்.

நாங்கள் வீடுகளை நிர்மாணிப்போம் என்று
அவர்கள் பயப்படுகின்றார்கள், அனைத்து அரசு பள்ளிகளையும் ஸ்மார்ட் பள்ளிகளாக
மாற்றுவோம் என்று அவர்கள் பயப்படுகின்றார்கள்.
நாங்கள் சுகாதாரத்துறையை
மேம்படுத்துவோம் என்று அவர்கள் பயப்படுகின்றார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.

