முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு! பிராந்திய இணைப்பாளர் தகவல்

தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (
Human Rights Commission Of Sri Lanka) கல்முனை பிராந்திய
இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “தேர்தல் காலத்தின் போது, தேர்தல் சட்டங்கள், நாட்டின் ஏனைய சட்டங்கள்,
நாட்டின் அரசியல் அமைப்பிற்கு இணங்க அந்தத் தேர்தல் நடாத்தப்படுவதனை உறுதி செய்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இது ஒவ்வொரு விடயத்திற்குப் பொறுப்பான அரச உத்தியோகத்தர்கள் அந்தச் சட்டங்களுக்கமைவாக
தங்களது கடமைகளை நியாயமானதாகவும் பக்கச்சார்பின்றியும் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்களிக்கும் உரிமை

1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு யாப்பின்படி,
மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை, சுதந்திரமாக அரசியலில் ஈடுபடும் உரிமை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான உரிமைகளுடன் சட்டத்திற்கு முன் யாவரும் சமம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு! பிராந்திய இணைப்பாளர் தகவல் | Report Election Rights Issues To Commission

ஓவ்வொரு அரச உத்தியோகத்தர்களும் அரசியல் அமைப்பிற்கு அமைவாக செயற்படுவதற்கு உறுதிமொழி
செய்துள்ளனர்.

அரச உத்தியோகத்தர்கள் கொண்டுள்ள சட்ட ரீதியான கடமைகளையும், பொறுப்புக்களையும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது நடவடிக்கை மேற்கொள்ளாமல் பக்கச்சார்பாக செயற்படல் அரசியல் அமைப்பு யாப்பின் அடிப்படை உரிமையினை
மீறும் செயலாகும்.

முறைப்பாடு

அவ்வாறு மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக
1996ம் ஆண்டின் 21ம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புலனாய்வுகள்
மற்றும் விசாரணைகளை நடாத்துவதற்கு மற்றும் அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.

தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு! பிராந்திய இணைப்பாளர் தகவல் | Report Election Rights Issues To Commission

இந்த அடிப்படையில் எமது பிராந்தியத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன், தேர்தல் தினத்தன்று அல்லது
தேர்தலின் பின்னர் அரச, நிருவாக, நிறைவேற்றுத் துறையினர் அடிப்படை உரிமையை மீறியதற்கான அல்லது மீறப்படுவதற்கான ஏதுக்கள் இருக்குமாக இருந்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.