விடுதலை போராட்டத்திற்கு முன்னர் போல இல்லாது இந்தியாவானது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் மீது நாட்டத்தை குறைத்து வருகிறது.
இதற்கு பிரதான காரணம் அவர்களின் ஒற்றுமையில் காணப்படுகின்ற குழப்பநிலை.
இந்த நிலை தொடர்வதை இன்றைய ஜனாதிபதி தேர்தலின் ஆதரவு நிலைப்பாட்டில் அறிய முடிகிறது.
நேற்றைய மாவை சேனாதிராஜா உடனான சந்திப்பில் ரணில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக அறிவித்திருக்கின்றார்.
மறுபுறம் சுமந்திரன் அநுரவுக்கு ஒரு ஆதரவை மறைமுகமாக வழங்கியுள்ளார்.
மாற்றத்தை எதிர்பார்க்கும் தெற்கு மக்களுக்கு மத்தியில் வடக்கின் நிலைப்பாடு மாற்றம் கண்டால் அது அவர்களின் மனரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அநுர.
இங்கு கூறப்பட்ட விடயம் அச்சுறுத்தல் செய்யும் ஒரு கருத்து என எதிராணிகளின் பதில்கள் எழுந்தன.
எனினும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், அநுர கருத்துக்கள் இனவாதத் தூண்டவில்லை என கூறியுள்ளார்.
உண்மையில், இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார் என்றார்.
இது அநுரவுக்கு சாதகமென்றாலும், ஆதரவை அறிவித்த சஜித்துக்கு பாதகம் என கூறப்படுகிறது.
இதற்கு ஏற்றால் போல் மாவை ரணிலை வரவேற்பதும், தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரதிநிதியான சிறீதரன் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதும், சஜித்துக்கு மாத்திரம் அல்லாது தமிழரசுக்கட்சிக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான தொடர்ச்சியான பிளவுகளின் முடிவில் இந்தியா தனது நகர்வுகளை தென்னிலங்கை அரசியலுடன் மையப்படுத்தி கொண்டு செல்கின்றது.
தமிழரசுக்கட்சியின் கடந்த கால முடிவுகள் தொடர்பில் இந்தியாவின் ஆலோசனைகளை பெறுவதும் அதற்கு இந்திய வழங்கும் ஆலோசனைகளை கேட்டுக்கொள்வதும் நிதர்சன உண்மை.
தமிழரசு கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பில் தென்னிலங்கை அரசியலுடன் ஒத்துப்போக இந்தியா வலியுறுத்தியமையும், அதற்கேற்ற ஒருவராக சஜித்தை அவர்கள் தெரிவு செய்தமையும் ஒருபக்கம் இருக்க, அவரை ஆதரித்தமைக்கான சரியான விளக்கத்தை தமிழரசு கட்சியோ அல்லது அக்கட்சியின் சுமந்திரன் அணி என கூறப்படும் தரப்புக்களோ வழங்கவில்லை.
இதற்கு பதில் அவர்களிடத்தில் இருக்கின்றதா என்பதும் தெரியவில்லை.
காணி பொலிஸ் அதிகாரத்திற்கு அப்பால் சென்று ஒரு அரசியலை நகர்த்த சிந்தியுங்கள் என இந்தியா சமீபத்தில் வலியுறுத்தியது.
இதன் அடிப்படையில் ஒருவேளை சஜித்தை இவர்கள் ஆதரித்தனரா என்பதும் புலப்படவில்லை.
ஒரு நேர்காணலில் மொட்டுக்கட்சியின் வேட்பாளரான நாமல், ”அரசியல்வாதிகளுக்கு தான் இந்த அரசியல் பிரச்சினை இருக்கின்றது.
மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவதில்லை.
பொலிஸ் அதிகாரத்தை வழங்கி விட்டதும் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்துவிடுமா? என கேள்வி எழுப்பினார்.
இந்த கருத்தானது காணி பொலிஸ் அதிகாரம் என்பதும் தமிழர்களுக்கு தீர்வை பெற்றுத்தராத ஒரு உரிமை கோரலா? என என்னத்தோன்றுகிறது.
அப்படி என்றால் தீர்வு இல்லாத விடயத்திற்காகவா இவ்வளவு காலமும் பேச்சுவார்த்தை நடக்கிறது?
தேர்தல் தத்துவம் மூலம் வாக்குறுதிகளால் மக்களுக்கு உறுதி வழங்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவு என்ற போர்வை, தமிழரசுக்கட்சியை உறுதி இல்லாது ஆக்கிவிட்டது என்றும் சில குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகிறது.