கண்டி மாவட்டம் புஸல்லாவை நகர் ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலின் பிள்ளையார் சன்னிதி மகா கும்பாபிஷேகமும் 16 அடி உயரமுடைய விநாயகர் பெருமான் சிலை வைப்பதற்கான பூமி பூஜையும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று (11) காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு வேதபாராயணம், புண்ணியாகவாஜனம், மகா பூர்ணாகுதி என்பன இடம்பெற்றுள்ளன.
விநாயகர் சிலைக்கான பூமி பூஜை
புசல்லாவ கதிர்வேலாயுத ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ வேத கானங்கள்,மேளதாளங்கள் முழங்க, அரோகரா கோஷத்துடன் பால்குட பவனி புஸல்லாவ நகரில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், இலங்கையில் மிக உயரமாக 16 அடி விநாயகர் சிலைக்கான பூமி பூஜையும் நடாத்தப்பட்டது.
இதில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.