அநுரகுமாரவுக்கு (Anura Kumara Dissanayake) வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து 15இலட்சம் பேர் வர இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எத்தனை பேர் வந்துள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க (Ashu Marasinghe) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் (12.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) முன்னர் இருந்ததைவிட பின்தள்ளப்பட்டு தோல்வியின் விளிம்புக்கு சென்றுள்ளனர்.
நிவாரணம்
இவர்கள் தேர்தல் பிரசார கூட்டங்களில் சேறு பூசும் பிரசாரமே செய்கிறார்கள். நாட்டை பொறுப்பேற்று எவ்வாறு முன்னேற்றுவது என்ற திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை.
நிவாரணம் வழங்கும் திட்டமே இவர்களிடம் இருக்கின்றன. அதனையே அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவர்களின் இந்த போலி பிரசாரம் தற்பாேது அம்பலமாகி இருப்பதால், இவர்களுக்கான மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது.
அதனால் இவர்கள் தற்போது மக்களை அச்சறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
பொய் பிரசாரங்கள்
பொய் பிரசாரங்கள் தொடர்பில் மக்கள் தற்போது விளங்கி வருகின்றனர்.
அதேபோன்று நாட்டை யாருக்கும் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மை நிலையையும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
அதனால் தேசிய மக்கள் சக்தியின் அச்சுறுத்தல்களுக்கு மக்கள் சரியப்போவதில்லை.
எவ்வாறான அச்சுறுத்தலாலும் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றியைத் தடுக்க முடியாது. இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு மக்கள் எதிர்வரும் 21ஆம் திகதி புள்ளடி மூலம் பதிலளிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.