பொது வேட்பாளருடன் சேர்ந்து பயணிக்காமைக்கான காரணம் குறித்து தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendren) விளக்கியுள்ளார்.
ஐபிசியின் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இறுதி யுத்தத்தின் முடிந்த பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், தமிழரசுக் கட்சியானது சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் என்று தெரிவித்தது.
தமிழ் மக்கள் மீது எல்லையற்ற அடக்குமுறைகளை பயன்படுத்திய ராஜபக்சர்களை எதிர்க்கும் நிலைப்பாடாகவே தாங்கள் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் என அப்போது தமிழரசுக் கட்சி குறிப்பிட்டிருந்தது.
இந்த தேர்தலில் பொன்சேகா தோல்வியுற்று ராஜபக்சர்கள் வெற்றி பெற்றதன் பின்னர், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் (R. Sampanthan) தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தனர்.
அதாவது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ராஜபக்சவுக்கு நன்றி என சம்பந்தன் தெரிவித்திருந்தார்.” என்றார்.
மேலும், இந்த தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் அபிப்பிராயம் என்ன? போன்ற பல முக்கிய விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய களம் நிகழ்ச்சி…
https://www.youtube.com/embed/L5puBHXi8D4