முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் செயற்பாட்டால் மூடப்பட்ட பல்கலைக்கழகம் : சஜித் குற்றச்சாட்டு

அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளதுடன் அவரால் தற்போது ஒரு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 51 ஆவது மக்கள் வெற்றி பேரணி நேற்றையதினம் (13) ஹபராதுவ (Habaraduwa ) நகரில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாச இந்த நாட்களில் வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்கவும் மேலும் சிலரும் கூறிக்கொண்டு திரிகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை இன்று மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura) மூடப்பட்டிருக்கின்றது.

அநுரவின் செயற்பாட்டால் மூடப்பட்ட பல்கலைக்கழகம் : சஜித் குற்றச்சாட்டு | Srilanka 2024 President Election Updates

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான பல வெகுஜன அமைப்புகளின் கூட்டத்திற்கு இடை நடுவில் புகுந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தடிகள் பொல்லுகளால் தாக்கியிருக்கின்றார்கள்.

புள்ளடிக்கு பகரமாக குண்டுகளையும் துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்தி, துப்பாக்கி முனையில் வன்முறையை ஏற்படுத்தி, பேப்பர் துண்டு ஒன்றின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கின்ற யுகத்திற்கு அநுரகுமார நாட்டை கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.

ரணிலும் (Ranil Wickremesinghe) அநுரவும் சேர்ந்து மேற்கொள்கின்ற பொறிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் போட்டி களத்தில் இருக்கின்றார்.

ஜனாதிபதி தேர்தல் 

ஒரு வேட்பாளர் அவரே தோல்வி அடைவார் என்று கூறுவது இதுவரையும் கேட்காத ஒரு விடயமாகும் இது ஒரு புதுமையாக இருக்கின்றது.

ரணில் விக்ரமசிங்க நாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக அன்றி அநுரகுமார திசாநாயக்கவை கையில் தாங்கிக் கொள்வதற்காகவே செயற்பட்டு வருகிறார்.

அநுரவின் செயற்பாட்டால் மூடப்பட்ட பல்கலைக்கழகம் : சஜித் குற்றச்சாட்டு | Srilanka 2024 President Election Updates

அவர் அநுரவின் ஆதரவாளராக இருக்கின்றார் கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போதும் ரணில் விக்ரமசிங்க தன்னை தோல்வியடைய செய்ய முயற்சி செய்தார்.

இந்த முறை தேர்தலின் போதும் தன்னை தோல்வியடைய செய்யவே முயற்சி செய்கின்றார் ரணில் மற்றும் அநுர என்போர் இருதரப்பினர் அல்ல.

இவர்கள் ஒரே அரசியல் கும்பல் இந்தக் கும்பலுக்கான தேவை நாட்டைக்கட்டி எழுப்புவது அல்ல 220 இலட்சம் மக்களின் மீதும் வரிச் சுமையை அதிகரிப்பதாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.