வாகன இறக்குமதியை நிறுத்திவிட்டு பட்டினியில் இருக்கும் மக்களுக்கு உணவு வழங்குங்கள் மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், மலையக இளைஞர் முன்னணியின் தலைவருமான இராதாகிருஸ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
ஹட்டன் (Hatton) டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்ற “இளைஞர் மாநாடு” இல் நேற்று (14) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
மேலும் கருத்து தெரிவித்த அவர்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று கூறினார் வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று.
முதலில் மலையக மக்களுக்கு வாகன இறக்குமதி தேவையில்லை.
வாகன இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் இருக்கும் மக்களுக்கு முதலில் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன இறக்குமதியை செய்து அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் சூழ்ச்சியையே செய்கின்றார் ரணில் விக்ரமசிங்க. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என இராதாகிருஷ்ணன் இதன் போது தெரிவித்துள்ளார்.