Courtesy: Sivaa Mayuri
எதிர்வரும் செப்டெம்பர் 21, 2024 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து வேட்பாளர்களும் தங்களது சொந்த வெற்றிக்காக மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
பிரசார நடவடிக்கை
சில வேட்பாளர்கள் மற்றவர்களின் சார்பாக பிரசாரம் செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது தேர்தல் சட்டத்தை தெளிவாக மீறுவதாகும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு அனைத்து வேட்பாளர்களையும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த விதிகளை மீறும் எந்தவொரு வேட்பாளரும் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.