ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை (P. Ariyanethiran) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் (jaffna) உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று (15.9.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேற்படி சந்திப்பில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
உத்தியோக பூர்வமாக மேடை
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) பரப்புரை கூட்டம் இன்று (15) யாழ்ப்பாணத்தில் (jaffna) இடம்பெற்றது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியினரும் இன்றைய கூட்டத்தில் உத்தியோக பூர்வமாக மேடை ஏறியிருந்தனர்.
கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (sumanthiran), மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் (C.V.K.Sivagnanam) ஆகியோர் மேடை ஏறியிருந்தனர்.
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள்
சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாசவின் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.