வாகரை இல்மனைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள் , சட்ட விரோத மண் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதோடு இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (15 ) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருடனான விசேட
கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த இரா சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்
பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான
தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும்
, அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டப்படுவதோடு ,
பிள்ளையான் போன்ற கொலையாளிகளையும் கைது செய்ய வேண்டும்
மேலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி
ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்
பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.