ஜனாதிபதி தேர்தல் களம் இலங்கையில் சூடுபிடித்துள்ள நிலையில் அநுர குமாரவிற்கான ஆதரவு கரம் நாளுக்கு நாள் அதிகரித்து முன்னிலையில் இடம்பிடித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மீதம் இருக்கும் நான்கு நாட்களில் ரணில் முக்கிய களப்படைகளை நகர்த்தி வருவதுடன், சஜித் தனது மனைவியையும் இறக்கியுள்ளார்.
இதன் காரணமாக சஜித் பிரேமதாச தோல்வியை தழுவலாம் என்ற அச்சத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் போலி பிரசாரங்களை அள்ளி வீசி தாக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மூன்று முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கி தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக தென்னிலங்கை வேட்பாளர்களின் கவனம் வடக்கு, கிழக்கு பக்கம் திரும்பியுள்ளதுடன், சுமார் 2 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த பின்னணியில் இதுவரை வெளியான கருத்து கணிப்புகளின் படி தபால்மூல வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க முன்னிலை வகிப்பதாகவும், அதிகளவிலான அரச ஊழியர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இலங்கையில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் பல தகவல்களை பகிர்ந்துக்கொண்ட காணொளி பின்வருமாறு,