ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (
Ranil Wickremesinghe) ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒள்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வரி அறவீடு
வரி அதிகரிப்பு இன்றி அரசாங்கம் கடந்த ஆண்டில் 700 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி செலுத்த வேண்டியவர்களிடம் வரி அறவீடு செய்யப்பட்டதன் மூலம் இவ்வாறு வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.